श्री:

Sri Desikadarsanam

ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம: தேசிக தர்சனம் வலைதளம் ஸ்வாமி தேசிகன் அடியார்களை இங்கு வரவேற்கின்றது. இங்கு ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீஸூக்திகளினை ஆதாரமாய் கொண்டு எழுப்படும் விசாரங்கள் மீது ஸ்ரீ.உ.வே.தண்ணீர்பள்ளி க்ருஷ்ணன் ஸ்வாமியின் பதில் பதிவுகள் வலைதள புத்தக வடிவில் சேகரித்து வைக்கப்படும். ஸ்வாமி தேசிக அபிமானிகள் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன் பெற ப்ரார்திகின்றோம்.அடியேன்

ABOUT US

ஸ்ரீ தேசிக தர்சனம்

श्रीमान् वेङ्कटनाथार्य: कवितार्किक केसरि वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्तां सदा हृदि

1. பகவத் ராமானுஜர் 1017ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர். 120 திருநக்ஷத்திரங்கள் எழுந்தருளியிருந்து, லக்ஷ்மி நாத ஸமாரம்பாம் என்று பகவானிடமிருந்து தொடங்கிய ஸித்தாந்தத்தை புநஸ்தாபனம் செய்தவர்.

ஆரண நூல் வழிச் செவ்வை அழித்திடும் ஐதுகர்க்கு ஓர் வாரணமாயவர் வாதக்கதலிகள் மாய்த்த பிரான் ஏரணி கீர்த்தி ராமானுஜமுனி இன்னுரைசேர் சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீவினையே

என்கிறார் ஸ்வாமி தேசிகன் குருபரம்பராஸாரத்தில்.

பகவத் ராமானுஜருக்கு ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை, பர மத நிரசனம் செய்து நிலை நாட்டிய பெருமை சேரும்.

அப்போது இருந்த கால கட்டத்தில் வைதீக மதங்களுக்குள் அத்வைத, த்வைத, விஸிஷ்டாத்வைத மதங்களே ப்ரஸித்தி பெற்றவைகளாக திகழ்ந்தன. வைதீக மத ஸ்தாபனர்கள் அனைவரும் ப்ருஹ்ம விசாரத்தில் உபநிஷத் பாகத்தையும், வேத வ்யாசர் அருளின சாரீரக சாஸ்த்ர பாகத்தையுமே(ப்ருஹ்ம ஸுத்ரத்தையுமே) முக்கிய ப்ரமாணமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அதில் உள்ள ஆபாதப்ரதீதியால் தோற்றுகின்ற முரண்பாடுகள் நீங்க, அதில் உள்ள பேத, அபேத ஸ்ருதிகளில் வெளிப்படையாக தெரிய வரும் வேற்றுமைகளை கடக ஸ்ருதியால் நிவ்ருத்தி செய்து இதி ஸர்வம் ஸமஞ்சஸம் என்று ஸ்ரீபாஷ்யக்காரருடைய ஸ்ரீபாஷ்யத்தில் மட்டுமே நிறைவு செய்யப் பெற்றது. இதனால் ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந்தத்தை மட்டுமே வ்யாஸ ஸித்தாந்தம் என்றும் அழைப்பதுண்டு.

ஸ்ரீபாஷ்யக்காரர் தம் வாழ் நாளில் ஒன்பது ஸம்ப்ரதாய க்ரந்தங்களை அருளியுள்ளார்:

  • ஸ்ரீபாஷ்யம்
  • கீதா பாஷ்யம்
  • சரணாகதி கத்யம்
  • ஸ்ரீரங்க கத்யம்
  • வைகுண்ட கத்யம்
  • வேதார்த்த ஸங்க்ரஹம்
  • நித்யம்
  • ஸாரம்
  • தீபம்

2. அனைத்து ஸ்ரீ ராமானுஜ க்ரந்தங்களுமே சாஸ்த்ரங்களையும் அவர் பூர்வாசார்யர்களின் கருத்தையும் ஒத்து இருக்கக் கூடியவை.

சித், அசித் மற்றும் ஈஸ்வரன் என்ற மூன்று தத்வங்களையும் வைதீக ப்ரமாணங்களை கொண்டு

ஸ்வாதீன த்ரிவித சேதனா அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ருவ்ருத்தி பேதம்

என்ற ப்ராமாணிகமான கூற்றை கையில் கொண்டு விளக்கி அருளியிருக்கிறார்.

ஸ்ரீபாஷ்யத்தில் வரும் ஸாதனாத்யாயத்தில் உபாயத்தை கூறும் இடத்தில்

தஸ்ய ச வசீகரணம் தத் சரணாகதிரேவ

என்றும் மற்றும் கீதா பாஷ்யம், சரணாகதி கத்யயாதிகளிலும் நிவ்ருத்தி தர்மமான பக்தி யோகம்

அல்லது சரணாகதி அனுஷ்டானத்திற்கு அல்லது ஸர்வேஸ்வரன் ஒருக்காலும் மனம் இரங்கான் என்று ப்ராமாணிகமான அர்த்தத்தை தெளிவு பட அருளியிருக்கிறார்.

ஸ்ரீபாஷ்யத்தில் வரும் பலாத்யாயத்தில் நிவ்ருத்தி தர்மத்தினால் வரும் புருஷார்த்ததின் ஸ்வரூபத்தை நன்கு விளக்கி அருளியிருக்கிறார்.

3. ஸ்வாமி தேசிகன் 1268ம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவோண நக்ஷத்திரத்தில் அவதரித்தவர். 101 திருநக்ஷத்திரங்கள் எழுந்தருளியிருந்து, ஸ்ரீ ராமானுஜ ஸித்தாந்தத்தை புநஸ்தாபனம் செய்வித்தவர். இதற்கு ப்ரதான காரணம் ஒன்று உண்டு :

ஸ்ரீபாஷ்யக்காரரால் இவ்வளவு தெளிவு பட சாஸ்த்திர அர்த்தங்களை அருளிய போதும், ஆபாதப்ரதீதியைக் கொண்டும், சில ஆழ்வார் பாசுரங்களையும், பாஷ்யக்காரருடைய ஸ்ரீஸுக்திகளையும் கையாண்டு அதற்கு சிகரம் போல் சில இடை செருகலையும், பொருந்தாத வேறு சில லௌகீக த்ருஷ்டாந்தத்தையும் மேற் கோள் காட்டி அவர் காலத்திற்கு பிறகு பரம ப்ராமாணிகமான ராமானுஜ மார்கத்தை திசை திருப்ப முயற்சித்தனர் சிலர். மேலும், சாஸ்த்ரங்களுக்கு ஒவ்வாத விஷயங்களை, ஸ்ரீபாஷ்யக்காரருடைய ஸ்ரீஸுக்திகளை கைவிட்டும், வியாக்யானம் செய்து வந்தனர் சிலர்.

இந்த பகவத் ராமானுஜ ஸித்தாந்தத்தை, அவர் நேரடிசிஷ்ய பரம்பரையடியாக (முறையே மடைப்பள்ளி ஆச்சான், கிடாம்பி ராமானுஜாச்சார், கிடாம்பி ரங்கராஜாச்சார், கிடாம்பி அப்புள்ளார் வழியாக) பிழையற காலக்ஷேபம் செய்து க்ரஹித்தவர் ஸ்வாமி தேசிகன் ; அதனால், ஸ்ரீ ராமானுஜ ஸித்தாந்தத்தை புநஸ்தாபனம் செய்வித்த பெருமை ஸ்வாமி தேசிகனைச் சாரும்.

பூர்வாசார்யர்கள் வழி மீறாது, சாஸ்த்திர விஷயங்களில் தெளிவு உண்டாக்க, தம் வாழ் நாளில் பலதரப் பட்ட ஸம்ப்ரதாய க்ரந்தங்களை, ஸ்வாமி தேசிகன், அருளியுள்ளார் :

ஸ்தோத்ரங்கள்

காவ்ய க்ரந்தங்கள் – யாதவாப்யுதயம், பாதுகா ஸஹஸ்ரம், ஹம்ஸ சந்தேசம் போன்றவை

நாடகம் – ஸங்கல்ப ஸுர்யோதயம்

ரஹஸ்ய க்ரந்தங்கள் – சில்லரை ரஹஸ்யம், ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய சாரம் போன்றவை

வேதாந்த க்ரந்தங்கள் – தத்வமுக்தாகலாபம், அதிகரண சாராவளி , சத தூஷணி போன்றவை

வ்யாக்யான க்ரந்தங்கள் – தாத்பர்ய சந்த்ரிகா, கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷா, ஸ்தோத்ர ரத்ன பாஷ்யம் போன்றவை

அனுஷ்டான க்ரந்தங்கள் – பகவத் ஆராதன விதி, வைஷ்ணவ தினசரி போன்றவை

தமிழ் ப்ரபந்தங்கள்

இதை தவிர வேறு சில க்ரந்தங்கள்

4. ஆசார்ய இலக்கணமாவது :

ஆசிநோதிஹி சாஸ்த்ராத்தாந் ஆசாரே ஸ்தாபயத்யபி. ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தஸ்மாத் ஆசார்ய உச்யதே

அதாவது,

விதி நிஷேத சாஸ்த்ரங்களை பிழை இல்லாமல் கற்று கற்றுவித்து அதன்படி நட்ப்பவரே ஆசார்யன் ஆகிறார்.

அந்த வகையில் பகவத் ராமானுஜரும் ஸ்வாமி தேசிகனும் ஆசார்யோத்தமர்கள்.

வைதீக மதங்களுக்குள்ளான சங்கைகளை போக்கியவர் ஸ்ரீபாஷ்யக்காரர். ஸ்ரீ ராமானுஜ ஸித்தாந்தத்திலும் ஏற்பட்ட சங்கைகளை போக்கியவர் ஸ்வாமி தேசிகன்.

5. இவ்வாறு, வேத மார்க்கமான, பகவத் ராமானுஜ ஸித்தாந்தமான, ஸ்வாமி தேசிக ஸம்ப்ரதாயமான தத்வ – ஹித – புருஷார்த்த விஷயங்களில், மேலும் சங்கைகளை ஏற்படுத்த சிலர், லௌகீக காரணங்களினால் ப்ரயாசிக்கும் போது, ப்ரமாண பூர்வகமாக, அதனை நிரசிக்க வேண்டிய கடமை ஸ்ரீ தேசிக அபிமானிகளுக்கு உண்டு என்பது தெளிய வேண்டியது ஏனெனில்,

யதா சக்தி நிக்ருஹண்யாத் தேவதா குரு நிந்தகான்

என்கிறது தர்ம சாஸ்த்திரம் ; ஸர்வேஸ்வரனையும் பூர்வாசார்யர்களுக்கும் அபகீர்த்தி வரும் வகையில் செயல் பூரிவோரை நிரஸிக்க சாஸ்த்திரம் விதிக்கிறது.

இதனால், ஸ்வாமி தேசிக ஸம்ப்ரதாயம் தழைத்தோங்க, ஸ்ரீ தேசிக அபிமானிகளால், இந்த இளைய தளம் 9.10.2022 அன்று தொடக்கப் பட்டுள்ளது !

இதையும், இன்புரும் இவ்விளையாட்டு உடையானின் லீலா ரஸ அனுபவம் என்றே கொள்ள வேண்டும் போலும்!

कवि तार्किक सिंहाय कल्याण गुण शालिने | श्रीमते वेंकटेशाय वेदान्त गुरवे नम:

Loading